அஜித்தின் ’வலிமை’ படத்தின் கிளிம்ப்ஸ் இன்று மாலை வெளியீடு

’நேர்கொண்ட பார்வை’ வெற்றிக்குப் பிறகு மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹீமா குரேஷியும், வில்லனாக கார்த்திகேயாவும் நடிக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின், முதல் பாடல் ‘நாங்க வேற மாரி’ வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில் பொங்கலையொட்டி ‘வலிமை’ வெளியாகிறது என்று தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

விரைவில் டீசரும் படத்தின் இரண்டாம் பாடலும் வெளியாகவுள்ள நிலையில், ‘வலிமை’ படத்தின் கிளிம்ப்ஸ் (முன்னோட்ட வீடியோ) இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. இந்த வீடியோவில் அஜித்தின் சண்டைக்காட்சிகள் மட்டுமே முழுக்க முழுக்க இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

#ValimaiGlimpse என்ற ஹேஷ்டேக்கிலும் வலிமை தொடர்ந்து ட்ரெண்டிங் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: பள்ளிகள் திறப்பு பற்றி எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை- அமைச்சர் அன்பில் மகேஷ்