அட..நம்ம தல துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்றுள்ளார் !

தமிழ் சினிமாவில் அஜித்துக்கு தனி இடம் உள்ளது.தனக்கென்று ஒரு வாழ்க்கையை வாழ்பவர் அஜித்.பொது இடங்களில் அவரை பார்ப்பது மிகவும் கடினம்.நடிப்பு மட்டுமின்றி பைக் ரேஸ் மற்றும் கார் ரேஸ் இதில் ஆர்வம் அதிகம் கொண்டவர்.

தற்போது சென்னை ரைஃபிள் கிளப்பில் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் கவனம் செலுத்தி வந்த அஜித், 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் அடுத்த சுற்றுக்கு தேர்வாகியிருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

அதைத் தொடர்ந்து தற்போது அவர் 10 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ள படங்களை அவரது ரசிகர்கள் டிவிட்டரில் பகிர்ந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.