வாகா எல்லையில் நடிகர் அஜித் !

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்.இவருக்கென்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது.தற்போது அஜித் நடிப்பில் வலிமை படம் உருவாகியுள்ளது.

பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும் நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் இந்த படத்தை தயாரித்து வருகிறார்.பொங்கல் திருநாளுக்கு இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியா – பாகிஸ்தான் எல்லையான வாகா எல்லைக்கு பைக்கில் பயணம் செய்து இருக்கிறார் நடிகர் அஜித்.ராணுவ வீரர்களுடன் கைக்குலுக்கும் புகைப்படங்களும் தேசியக் கொடியை கையில் ஏந்தியிருக்கும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இதையும் படிங்க : தஞ்சாவூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு!