தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் எதிரொலியாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இந் நிலையில் இன்று மற்றும் நாளை 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பதாவது:
தமிழகத்தில் கரூர் ,திருச்சி,கள்ளக்குறிச்சி.தேனி,திண்டுக்கல்,மதுரை,நெல்லை,தென்காசி,குமரி,வேலூர் ,கிருஷ்ணகிரி,தர்மபுரி,சேலம்,ஈரோடு,நாமக்கல்,திருப்பூர்,கோவை ஆகிய 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : வாகா எல்லையில் நடிகர் அஜித் !



