தஞ்சாவூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு!

தஞ்சாவூர் மாவட்டத்தில் இரு வேறு சமூகத்தை சேர்ந்தவர்களிடையே மோதல் காரணமாக
அப்பகுதியில் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள திருவைக்காவூரில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக, 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவைக்காவூர் ஊராட்சியில் மண்ணியாறுப் பாலம் அருகில் கொடிக்கம்பம் வைப்பது தொடர்பாக இரு சமூகத்தினருக்கிடையே பிரச்சினை ஏற்பட்டது.மோதலில் ஈடுபட்டவர்களை தடுக்க முயன்ற இரு உதவி ஆய்வாளர்கள் உட்பட 10 பேர் கல்வீச்சில் படுகாயமடைந்தனர்.

திருவைக்காவூர் ஊராட்சியில் வருவாய்த் துறை சார்பில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ஷீரடி கோவிலில் பிரபல கோலிவுட் ஜோடி !