ஷீரடி கோவிலில் பிரபல கோலிவுட் ஜோடி !

தமிழ் மட்டும் இல்லாமல் தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா.கிட்டத்தட்ட 15 வருடத்திற்கும் மேலாக தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார்.

லேடி சூப்பர் ஸ்டார் என்று நயன்தாராவை ரசிகர்கள் அழைக்கின்றனர் அந்த அளவிற்கு புகழின் உச்சத்தில் உள்ளார்.நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் காதலிக்கின்றனர் என்ற செய்தி அனைவர்க்கும் தெரியும்.

சமீபத்தில் ஒரு பிரபல தொலைக்காட்சியில் நடந்த நயன்தாரா ஷோவில் இருவருக்கும் நித்தியதார்தம் நடந்துவிட்டது என்று நயன்தாரா தெரிவித்தார்.இவர்கள் இருவரும் அடிக்கடி வெளியூர் செல்லும்போது எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவர்.அந்த புகைப்படங்கள் செம வைரல் ஆகும்.

அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கி தயாரிக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படமும் விரைவில் வெளியாகவிருக்கின்றன.இதில் நயன்தாரா ,சமந்தா நடிக்கின்றனர்.

இந்த நிலையில், நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் மராட்டிய மாநிலத்தில் உள்ள உள்ள சீரடி சாய்பாபா கோவிலுக்குச் சென்று வழிபட்டனர். இந்தப் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார் விக்னேஷ் சிவன்.

இதையும் படிங்க : இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் !