ஜூன் 30ம் தேதிக்குள் ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க வேண்டும்

தற்போது பெரும்பாலானோரிடம் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு ஆகியவை உள்ளது. ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு கூறியது. அதற்கு விதிக்கப்பட்ட கெடு பலமுறை நீட்டிக்கப்பட்டு கடைசியாக ஜுன் 30ம் தேதி என அறிவிக்கப்பட்டது. எனவே, பலரும் இரண்டையும் இணைத்து வருகின்றனர்.

ஜூன் 30ம் தேதிக்குள் இதை செய்யாவிட்டால் ஜூலை 1ம் தேதிக்குள் பின் ரூ.1000 அபராதமாக விதிக்கப்படும். மற்றும் வேறு பல பிரச்சனைகளையும் மக்கள் சந்திக்க நேரிடும். இருசக்கர மற்றும் மற்ற வாகனங்களை வாங்கவோ விற்கவோ முடியாது.

வங்கியில் கணக்கு திறக்க முடியாது. கிரெடிட்/டெபிட் கார்டுகளுக்கு விண்ணப்பிக்க முடியாது. ஹோட்டல் அல்லது ரெஸ்டாரண்டில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் செலுத்த முடியாது. அதேபோல் ரிசர் வங்கியில் ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் பத்திரங்கள் வாங்க முடியாது.