பப்ஜி மதன் தலைமறைவு

ஆன்லைன் பப்ஜி விளையாட்டில் ஆபாசமாக பேசிவரும் ‘பப்ஜி மதன்’ என்கிற யூடியூபர் தலைமறைவான நிலையில், அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

மேலும், அந்த நபரின் சமூகவலைதளப் பக்கத்தை முடக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மதன் இருக்கும் லொகேஷனைக் கண்டுபிடிக்க போலீசார் தீவிரம் காட்டிவரும் நிலையில், ஒருவித தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தன்னுடைய இருப்பிடத்தை வேறுவேறு இடமாக மாற்றிக் காட்டக்கூடிய வகையில் மதன் செயல்படுவதாக தெரியவந்துள்ளது.