என்னது 20,000 ஆண்டுகளுக்கு முன்பே கொரோனா தொற்று இருந்ததா !

coronavirus
கொரோனா தொற்று பாதிப்பு நிலவரம்

கொரோனா தொற்று கடந்த வருடம் முதல் உலகில் பரவ தொடங்கி உலக மக்களை ஆட்டிப்படைத்து.மேலும் கொரோனாவின் பரவல் அலை இரண்டு,மூன்று என அதிகரித்து வருகிறது.

இந்த கொரோனா வைரஸ் என்பது 20,000 ஆண்டுகளுக்கு முன்பே தெற்காசியாவில் பரவியதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.

20,000 ஆண்டுகளுக்கு முன்னர் கிழக்கு ஆசியா முழுவதும் ஒரு கொரோனா வைரஸ் வீசியிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.சீனா, ஜப்பான், மங்கோலியா, வடகொரியா, தென் கொரியா மற்றும் தைவான் போன்ற பகுதிகளில் இந்த தாக்கம் இருந்ததாக தெரிகிறது.

இந்த ஆராய்ச்சி தற்போதைய கரண்ட் பயோலாஜி என்ற இதழில் வெளியிடப்பட்டது மற்றும் ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்டது.

உலகின் 26 வெவ்வேறு மக்கள்தொகை குழுக்களில் இருந்து கிட்டத்தட்ட 2,500 பேரின் மரபணுக்களை ஆய்வு செய்ததில் இது தெரியவந்துள்ளது.