நடிகையும் மற்றும் செய்தி வாசிப்பாளரான பாத்திமா பாபு மருத்துவமனையில் அனுமதி !

பிரபல செய்தி வாசிப்பாளருமான பாத்திமா பாபு உடல்நல குறைவால் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இவர் தமிழ் திரைப்படங்களில் மற்றும் சீரியல்களில் நடித்துள்ளார்.மேலும் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றவர்.

அவர் மருத்துவமனையில் இருக்கும் சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின.

இதற்கு தனது யூடியூப் சேனல் மூலம் விளக்கமளித்துள்ள அவர், சிறுநீரக பிரச்னையால் அவதியடைந்து வந்த அவர் அறுவை சிகிச்சை செய்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது அவர் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.மேலும் தண்ணீர் அதிகம் குடியுங்கள் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.தினமும் 3 லிட்டர் தண்ணீர் குறைந்தபட்சம் குடியுங்கள் என்றும் அவர் அனைவருக்கும் அட்வைஸ் கொடுத்து உள்ளார்.