நயன் -விக்கி திருமணம் எப்போது ?

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா.ஏராளமான சர்ச்சிகளில் சிக்கினாலும் தனது அசாத்திய நடிப்பினால் ரசிகர்களை கட்டிப்போட்டவர்.தற்போது நயன்தாரா நடிக்கும் படம் என்றாலே ஹிட் தான் என்று கூறுகிறார்கள்.

நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் காதலை உறுதிப்படுத்த இவர்கள் அவ்வப்போது அவர்களின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவார்கள்.

விக்னேஷ் சிவனிடம் ரசிகர் ஒருவர் உங்களுக்கும் நயன்தாராவுக்கும் எப்போது திருமணம்? என்று கேள்வி கேட்டுள்ளார்.இதற்கு அவர்,திருமணத்துக்கு எல்லாம் ரொம்ப செலவு ஆகும் ப்ரோ.

இப்போது திருமணத்துக்குப் பணம் எல்லாம் சேமித்து வைத்துக் கொண்டிருக்கிறேன். கொரோனா எப்போது போகும் என்றும் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று பதிலளித்துள்ளார்.

மற்றோரு கேள்வியில்,நயன்தாராவுக்கு எந்த உடை அழகாக இருக்கும் என்ற கேள்விக்கு ,புடவை என்று கூறியுள்ளார்.மேலும் நயன்தாரா பற்றி ஏதேனும் ஒரு ரகசியம்? என்ற கேள்விக்கு,வீட்டில் டின்னர் முடிந்தவுடன் அவர்தான் அனைத்துப் பாத்திரங்களையும் கழுவுவார் என்று கூறியுள்ளார்.