93-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா !

உலகளவில் திரைப்படத் துறையில் மிக உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர் எனும் அகாடமி விருது.93-வது ஆஸ்கர் விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள யூனியன் ஸ்டேஷன் மற்றும் கலிபோர்னியாவில் உள்ள டால்பி தியேட்டரில் இன்று நடைபெற்றது.

ஆஸ்கர் விருதை வென்ற படங்கள்,சிறந்த படம் – நோ மேட்லாண்ட்.மேலும் இந்த படத்தில் நடித்த நாயகி பிரான்சஸ் மெக்டார்மண்டுக்கு சிறந்த நடிகைக்கான விருதும், இப்படத்தை இயக்கிய க்ளோயி சாவ்விற்கு சிறந்த இயக்குனருக்கான விருதும் கிடைத்தது.

சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருதை தி பாதர் படத்துக்காக கிறிஸ்டோபர் புளோரியன் பெற்றார். சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான விருதை அனதர் ரவுண்ட் பெற்றது.