8 ம் மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு – மேற்கு வங்கம் !

தமிழகம், கேரளம், புதுச்சேரி மற்றும் அஸ்ஸாம் , மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டன.அதில் மேற்கு வங்கம் தவிர அணைத்து மாநிலங்களின் வாக்குப்பதிவு முடிந்தன.

மேற்கு வங்கத்தில் 7 கட்ட வாக்கு பதிவுகள் முடிந்தன.இன்று 8 ம் கட்ட வாக்கு பதிவு நடைபெற உள்ளது.இன்று 35 தொகுதிகளுக்கான இறுதி கட்டத் தேர்தல் இன்று நடைபெறுகிறது.கரோனா பரவல் காரணமாக பிரச்சாரம் செய்யவும் தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது.

இன்று நடைபெறவுள்ள இறுதி கட்டத் தேர்தலில் 84,77,728 வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா்.இந்த தேர்தலில் 4 மாவட்டங்களில் நடைபெற உள்ளது.