ரத்துசெய்யப்பட்டது மெகா தடுப்பூசி முகாம் !

சென்னை ஐஐடியில் 3 நாட்களில் 30 பேருக்கு பாசிட்டிவ்
சென்னை ஐஐடியில் 3 நாட்களில் 30 பேருக்கு பாசிட்டிவ்

கொரோனா தொற்றின் 2 ம் அலை தமிழகத்தை வெகுவாக தாக்கியது.இதன் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது.இந்த ஊரடங்கு காலத்தில் தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது.

தமிழகத்தில் ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.தமிழகத்தில் இதுவரை வெற்றிகரமாக கெரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று அதில் நிறைய மக்கள் இலவச தடுப்பு ஊசிகளை செலுத்தி கொண்டனர் இதை ஊக்குவிக்கும் வகையில் பல பரிசுகள் வழங்கப்பட்டன.

தமிழகத்தில் நாளை 8வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இதற்காக 50 ஆயிரம் முகாம்கள் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

தற்போது,தமிழகத்தில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அந்த மாவட்டங்களில் முகாம்கள் அமைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.மேலும் தீபாவளி பண்டிகை என்பதால் பணியாளர்கள் விடுப்பு எடுத்துள்ளனர் .இதன் காரணமாக மெகா தடுப்பூசி முகாமை நாளை நடத்துவதற்கு பதில் அடுத்த வாரம் நடத்த அரசு முடிவு செய்துள்ளது.