ஆஹா! தீபாவளி பரிசாக ஊழியர்களுக்கு மின்சார ஸ்கூட்டர் !

குஜராத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம் தீபாவளி பரிசாக ஊழியர்களுக்கு மின்சார ஸ்கூட்டர் வழங்கியுள்ளது.

தீபாவளியை முன்னிட்டு சூரத்தை சேர்ந்த நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பரிசாக வழங்கியுள்ளது. பெட்ரோல் விலை உயர்ந்து வருவதை கருத்தில் கொண்டு இந்த நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது

அலையன்ஸ் குழுமம் என்ற நிறுவனம் ஊழியர்களுக்கு மின்சார ஸ்கூட்டர்களை பரிசாக வழங்கியுள்ளது.இந்த நிறுவனத்தின் இயக்குனர் சுபாஷ் தாவர் கூறுகையில், “எரிபொருள் விலை உயர்வு மற்றும் பிற காரணிகளை கருத்தில் கொண்டு, எங்கள் ஊழியர்களுக்கு மின்சார வாகனங்களை பரிசளிக்க முடிவு செய்துள்ளோம்” என்றார்.


குழுவில் எம்பிராய்டரி இயந்திரங்கள் தொழிலை கவனித்து வரும் சுபாஷின் மகன் சிராக் கூறுகையில், இந்த தீபாவளிக்கு நிறுவனம் 35 ஊழியர்களுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வழங்கியுள்ளது. பெட்ரோலில் இயங்கும் பைக்குகளுக்குப் பதிலாக இவை கொடுக்கப்பட்டுள்ளன.