80 சதவீத வாக்குகள் பதிவு – புதுவை !

தமிழக சட்டப்பேரவை தேர்தலுடன் புதுச்சேரி சட்டப்பேரவைக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இன்று காலை 7 மணி முதல் தொடங்கிய இந்த வாக்குப்பதிவு, இன்று இரவு 7 மணி வரை நடந்தது.

புதுச்சேரியில் வாக்குப்பதிவு அளிக்க மக்கள் ஆர்வம் காட்டினார் . மாலை 7 மணி வரையில் 80.63 சதவீத வாக்குகள் பதிவாகின. ஏனாமில் 87.79 சதவீதமும், காரைக்காலில் 79.16 சதவீதமும், மாஹேவில் 72.86 சதவீத வாக்குகளும் பதிவாகின.

தற்போது, வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணிகளில் தேர்தல் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.