தமிழக சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்தது !

தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் இன்று நடந்து முடிந்தது.தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கியது. 

தங்கள் வாக்கினை செலுத்த பொதுமக்கள்,அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.வாக்காளர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தேர்தல் கட்டுப்பாடுகளை திரும்பப் பெறுவது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்யும். நாளை முதல் வாகன பரிசோதனை கிடையாது.

அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 78 சதவீதமும், குறைந்த பட்சமாக சென்னையில் 59 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. இன்று நள்ளிரவுக்கு பிறகே சரியான வாக்குப்பதிவு நிலவரம் தெரிய வரும், எனக் கூறினார்.

சரியாக 7 மணியளவில் தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மாலை 7 மணி நிலவரப்படி 71.79 % வாக்குகள் பதிவாகியுள்ளன.