8 மாதக் குழந்தை வெட்டி கொலை – நெல்லை !

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அருகே ரசல் ராஜ் மற்றும் அவரது மனைவி எப்சிபாய் வசித்துவருகிறார்கள்.இவர்களுக்கு 4 பெண்கள் உள்ளனர்.இவரது மகள் ஏஞ்சலின் நல்லதாம் மற்றும் அவரது கணவரும் வெளிநாட்டில் பணிபுரிகின்றனர்.

இவர்களின் 8 மாத தாத்தா பாட்டி இடம் வளர்கிறது.கடைசி மகள் ஏஞ்சல் பிளசி நர்சிங் முடித்து கோவையில் பணி செய்து வருகிறார். இவரை பணகுடி அருகே உள்ள ரோஸ்மியாபுரத்தை சேர்ந்த சட்டம் படித்துள்ள சிவசங்கரன் என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில்,ரசல்ராஜ் வீட்டிற்கு சென்று ஏஞ்சல் பிளஸ்சியை திருமணம் செய்ய பெண் கேட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவரது பெற்றோர் ரசல்ராஜ் மறுத்து விட்டதாக தெரிகிறது.இதனால் அதிரமதைந்த சிவசங்கரன் அவர்கள் வீட்டிற்கு அருவாளுடன் உள்ளே நுழைந்து எப்சிபாயை வெட்ட முயன்றுள்ளார்.

வெட்ட முற்படும் போது தூங்கி கொண்டிருந்த குழந்தை அக்சயா குயின் மீது வெட்ட விழுந்துள்ளது. இதில் குழந்தை அக்ஷ்யா குயின் வெட்டு பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தது. மேலும் எப்சிபாயையும் சராமாரியாக வெட்டியுள்ளார்.இதுகுறித்து  களக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.