ஹோட்டல்களில் கெட்டுப்போன 8 கிலோ சிக்கன் பிரியாணி..!

சேலத்தில் உள்ள ஹோட்டல்களில் திடீர் சோதனை மேற்கொண்டது அதிகாரிகள் 20 கிலோ மாட்டிறைச்சி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

வேலூர் மாவட்டத்தில் ஆட்சியரின் அறிவுறுத்தல் படி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஹோட்டல்களில் ஆய்வு மேற்கொண்டனர். சாய்நாதபுரம், பாகாயம் போன்ற பகுதிகளில் உள்ள 16 கடைகளில் ஆய்வு செய்தனர். குளிர்சாதன பெட்டியில் வைத்து மீன், இறைச்சி போன்றவை என்பதை தீவிரமாக பரிசோதித்தனர்.

அந்த சோதனையின் போது 20 கிலோ கெட்டுப்போன மாட்டிறைச்சி, 8 கிலோ சிக்கன் பிரியாணி, அதிக அளவு கலர் பயன்படுத்தப்பட்ட 2 கிலோ சிக்கன் போன்றவற்றை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் சுகாதாரமின்றி இயங்கிய 3 ஹோட்டல்களுக்கு எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள் விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸும் வழங்கியுள்ளனர்.

இதையும் படிங்க: புதிய முதல்வராக பதவியேற்றார் சரண்ஜித் சிங் சன்னி !