இந்தியாவில் இணையதள பயன்பாடு அதிகரித்து வருகிறது. 75 கோடி பேர் இணையதள இணைப்பு பெற்று இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் 25 வருடங்களுக்கு முன்பு தொலை தொடர்பு புரட்சி ஏற்பட்டது. இணையதளம் தொடங்கப்பட்டது.
ஆனாலும் பரவலாக அது மக்களிடையே சென்றடையவில்லை. ஆனால் கடந்த 2016–ம் ஆண்டுக்கு பிறகு இணையதளத்தின் பயன்பாடு அதிகரித்து விட்டது. 2016–ம் ஆண்டு 34 கோடி பேர் இணையதள இணைப்பு பெற்று இருந்தனர். அது இப்போது 76 கோடியாக உயர்ந்துவிட்டது.