7 பேர் விடுதலை: காங்கிரஸ் கட்சி ஆதரிக்கவில்லை – கே.எஸ்.அழகிரி

7 பேர் விடுதலை தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை என தமிழக காங்கிரஸ் கமிட்டித்தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

முன்னதாக, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக சிறையில் 30 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த வழக்கை விசாரித்த சிபிஐ விசாராணைக்குழுவும் 7 பேர் விடுதலையில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று கூறியது. இந்த நிலையில் நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதினார்.