விருதுகளை அள்ளிச்சென்ற சூரரை போற்று திரைப்படம் !

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகருள் ஒருவர் சூர்யா.மேலும் சூர்யா நடிப்பில் வெளிவந்த சூரரை போற்று திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தை இயக்கியவர் சுதா கொங்கரா.மேலும் இதில் பொம்மியாக நடித்த அபர்ணா பலமுரளியின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது.

மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார் நடிகர் சூர்யா இந்த படத்திற்காக பெற்றார்.தற்போது நடைபெற்ற SIIMA விருது விழாவில், 6 விருதுகளை வாங்கியுள்ளது ‘சூரரை போற்று’ திரைப்படம்.

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகிய இப்படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது.தற்போது பட குழுவினரும் சூர்யா ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க : சிம்புவின் csk பாடல் வெளியானது !