அரசு பணிகளில் பெண்களுக்கு 40 சதவீத இட ஒதுக்கீடு !

mega sport city
விளையாட்டு வீரர்களுக்காக மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி

தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று முதல்வர் ஆனார் ஸ்டாலின்.முதல்வராக பொறுப்பேற்ற நாளில் இருந்து அதிரடியாக புதிய திட்டங்களை மக்களுக்கு அறிவித்து வருகிறார்.

தமிழகத்தில் அரசு பணியாளர்களுக்கு புதிய மருத்துவ காப்பீடு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.அரசு பணிகளில் பெண்களின் இட ஒதுக்கீடு 40 சதவிகிதமாக உயர்த்தப்படும் என்று மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு பணிகளில் பெண்களுக்கு 30 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக இடஒதுக்கீடு உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்ற நபர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும்.மேலும் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த இளைஞர்களுக்கு அரசு பணிகளில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : உதயநிதி ஸ்டாலின் அண்ணா பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழு உறுப்பினராகிறார்