உதயநிதி ஸ்டாலின் அண்ணா பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழு உறுப்பினராகிறார் !

அண்ணா பல்கலைக் கழகத்தின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

தமிழக முதல்வரும் மற்றும் திமுக தலைவருமான ஸ்டாலின் அவர்களது மகன் உதயநிதி ஸ்டாலின்.இவர் திமுக கட்சியின் இளைஞர் அணி செயலாளர் ஆக உள்ளார்.

சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின்.தற்போது இவர் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பல்கலைக்கழகங்களில் ஆட்சிமன்ற குழு என்று தனியாக இருக்கும். அதன் உறுப்பினராக அந்தந்த மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் இடம்பெறுவது வழக்கம். அதன் அடிப்படியில், அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்ற குழு உறுப்பினராக உதயநிதி நியமிக்கப்பட்டுள்ளார் .

இதையும் படிங்க : தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆதார் தேவையில்லை