மலையாள நடிகர் ரிசபாவா காலமானார் !

மலையாள நடிகரான ரிசபாவா காலமானார். அவருக்கு 55 வயது. தனியார் மருத்துவமனையில் சிறுநீரக நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவர் காலமாகியுள்ளார்.

2010 இல், டப்பிங்கிற்கான மாநில விருதை வென்றார்.மேலும் அவர் சித்திக் மற்றும் லால் இயக்கிய இன் ஹரிஹர் நகரில் ஜான் ஹொனாய் என்ற படத்தில் அறிமுகமானார் .

120 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் தொடர்களில் நடித்துள்ளார்.சிறு வயதிலிருந்தே நாடகத்தின் மீது ஆழ்ந்த அன்பு இருந்ததால் தன் பயணத்தை நாடக கலைஞராக துவங்கினர்.40 வருடமாக திரைத்துறையில் இருந்துவந்தார்.