அட சூப்பர்..தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு !

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் 2009ன் படி, 2021-22 கல்வி ஆண்டிற்கு 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு சிறுபான்மை அற்ற தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

மேலும், எல்கேஜி அல்லது முதல் வகுப்புகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் சேர விரும்புபவர்கள், இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.இந்த மாணவர் சேர்க்கைக்கு வரும் 5ம் தேதி முதல் அடுத்த மாதம் 3ம் தேதி வரை rte.tnschoolsgov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பள்ளியில் உள்ள இடங்களை விட அதிக அளவில் மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தால் ஆகஸ்ட் 10 அன்று குலுக்கல் முறையில் மாணவர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.