கோவாவில் ஜூலை 12-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு !

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனை தடுக்க மாநில மற்றும் ஒன்றிய அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது.

கோவாவில் கோவிட் தொடர்பான ஊரடங்கு ஜூலை 12 வரை கோவா அரசு நீட்டித்துள்ளது என்று முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு மே 9 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு முதலில் விதிக்கப்பட்டது, அதன் பின்னர் பல முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 12 காலை 7 மணி வரை மாநில அளவிலான ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. கடைகள் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். சலூன்கள் மற்றும் வெளிப்புற விளையாட்டு வளாகம் / அரங்கங்களும் திறக்கப்படலாம்.

மேலும் கொரோனா தொற்று இருக்கும் பணியாற்றிய மாநிலத்தில் உள்ள ஒப்பந்த சுகாதார ஊழியர்களுக்கு அரசு சேவைகளில் முன்னுரிமை வழங்கப்படும் என்று முதல்வர் பிரமோத் சாவந்த் கூறினார்.