மின்னல் தாக்கி 18 யானைகள் உயிரிழப்பு

அசாமில் வனப்பகுதியில் மின்னல் தாக்கியதில் 18 யானைகள் உயிரிழந்தன.

அசாமின் நகோன் வனப்பகுதியில் உள்ள கதியதோலி வனச்சரகத்தில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் 18 யானைகள் உயிரிழந்தன. இது குறித்து தகவல் அறிந்த, வனப்பகுதியை ஒட்டி வசிக்கும் கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து அங்கு வந்த வனத்துறை அதிகாரிகள் உயிரிழந்த யானைகளை கண்டுபிடித்தனர். பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதல் கட்ட விசாரணையில் மின்னல் தாக்கியதில் தான் யானைகள் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.