கழிப்பறையில் 16 வயது சிறுமியை கற்பழித்த கும்பல்

கழிப்பறையில் வைத்து 16 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள எட்டா கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் கடந்த புதன் கிழமை ஊரில் உள்ள பொது கழிப்பிடத்திற்கு தனது தம்பியை துணைக்கு அழைத்து சென்றுள்ளார்.

அதே கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஊர் தலைவர் ராஜிவ் மற்றும் அவரது 2 நண்பர்கள் இதனை கவனித்து மூவரும் கழிப்பறைக்குள் சென்று தாழ்ப்பாளிட்டு கொண்டனர். அப்பொழுது கூச்சலிட்ட சிறுமியை வாயை பொத்தி கை மற்றும் கால்களை கட்டி ஒருவர் பின் ஒருவராக மாறி மாறி சிறுமியை கொடூரமாக கற்பழித்துள்ளனர்.