ரம்யா நம்பீஸன் புதிய ப்ராஜெக்ட்

தமிழ் மலையாளம் என மாறி மாறி நடித்து வருகிறார் நடிகை ரம்யா நம்பீசன்.கடைசியாக அவர் தமிழில் நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது உண்மை சம்பவ படமொன்றில் நடிக்கிறார்.சமீபகாலமாக நிஜத்தில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து வரும் கதைகள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறத் தொடங்கிவிட்டன.

நிஜத்தில் நடக்கும் சம்பவங்களை, திரைக்கதையாக அழகாகக் கோர்த்துப் பல இயக்குநர்கள் கதைகளைச் சொல்லும் விதம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் இணைகிறார் அறிமுக இயக்குநர் வெற்றி துரைசாமி.பல சம்பவங்கள் நாளிதழில் சிறு செய்தியாக வந்திருக்கும். அதைப் படித்துவிட்டு எளிதில் கடந்துவிடுவோம். அப்படி நாம் கடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்தப் படம் உருவாகியுள்ளது. மனிதக் குலத்தின் இன்றியமையாத பகுதியான கால்நடை வளர்ப்பு, உலகமயமாக்கல் கொண்டு வந்த இடம்பெயர்வு பற்றிய கதை இது.