+2 பொதுத்தேர்வு மதிப்பெண் வழங்கும் முறை !

cbse-class-12-term-1-announcement
CBSE 12 ஆம் வகுப்பு பருவம் 1

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.இதனை தடுக்க அரசு ஊரடங்கை அறிவித்தது.12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் மாணவர்களின் நலன் கருதி ரத்து செய்யப்பட்டுள்ளன.

பிளஸ் 2 தேர்வுக்கு இறுதி மதிப்பெண்கள் கீழ்கண்ட விகிதாச்சார அடிப்படையில் வழங்க வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளது.
அதில்,10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு (உயர் மதிப்பெண் பெற்ற 3 பாடங்களுடைய சராசரி) – 50%,
11 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு (ஒவ்வொரு பாடத்திலும் பெற்ற எழுத்துமுறை (Written) மதிப்பெண் மட்டும்) – 20%, 12 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு (Practical) / அக மதிப்பீடு (Internal) – 30%

12ஆம் வகுப்பில் ஒவ்வொரு பாடத்திலும் செய்முறைத் தேர்வு (20) மற்றும் அக மதிப்பீட்டில் (10) என மொத்தம் 30-க்குப் பெற்ற மதிப்பெண் முழுவதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

· செய்முறைத் தேர்வு இல்லாத பாடங்களில் அக மதிப்பீட்டில் (10) பெற்ற மதிப்பெண் 30 மதிப்பெண்களுக்காக மாற்றப்பட்டு (Extrapolated to 30 Marks) முழுவதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் இரண்டிலும் பங்குபெற இயலாத மாணவர்களுக்கு அவர்களின் 10ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு எழுத்துத் தேர்வுகளின் அடிப்படையில் 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு மதிப்பெண் வழங்கப்படும்.

கடந்த ஆண்டு 11ம் வகுப்பு எழுத்து தேர்வில் ஏதேனும் பாடங்களில் தோல்வி அடைந்திருந்தாலோ, தேர்வு எழுத இயலாத நிலை இருந்தாலோ, அம்மாணவர்களுக்கு அத்தேர்வுகளை மீண்டும் எழுத வாய்ப்பு இல்லாத நிலையை கருத்தில் கொண்டு 35 சதவீதம் மதிப்பெண் வழங்கப்படும்.