பேருந்துகள் அனுமதி எந்த மாவட்டங்களுக்கு தெரியுமா !

கொரோனா தொற்றின் பரவலை கட்டுப்படுத்த கடந்த மாதம் 10 ம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.தற்போது ஜூலை 5 ம் தேதி வரை கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.

23 மாவட்டங்களில் பேருந்து சேவை தொடங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில்

தற்போது 23 மாவட்டங்களில்[அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர்]

28-ம் தேதி காலை 6 மணி முதல் பேருந்துகள் ஓடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

50% பயணிகளுடன் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி பேருந்துகள் இயக்க வேண்டும்.மேலும் மாஸ்க் அணியாத பயணிகளை பேருந்துக்குள் அனுமதிக்க கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.