வேகமெடுக்கும் டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு !

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் 3 ம் அலை 6 முதல் 8 வாரங்களில் வரும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

டெல்டா வைரஸ் மரபணு மாறி டெல்டா பிளஸ் என்ற வைரஸ் உருவாகி உள்ளது.இந்த வகையான வைரஸ் முதலில் மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் கேரளாவில் கண்டறியப்பட்டது.

இந்தியாவில் 11 மாநிலங்களில் டெல்டா பிளஸ் கரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

குஜராத் மற்றும் பஞ்சாப்பில் இருவருக்கும், ஆந்திரா, ஒடிசா, ராஜஸ்தான், கர்நாடகா, ஜம்மு தலா ஒருவருக்கும் டெல்டா பிளஸ் வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 மகாராஷ்டிராவில் 20 பேருக்கும், தமிழகத்தில் 9 பேருக்கும், மத்தியப் பிரதேசத்தில் 7 பேருக்கும், கேரளாவில் 3 பேருக்கும் டெல்டா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.