தமிழகத்தின் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் !

கொரோனா தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது.இந்த ஊரடங்கில் நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இன்று தமிழகத்தில் 5,415 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இதில் 3,069 பேர் ஆண்கள், 2,346 பேர் பெண்கள்.மேலும் இன்று 148 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவையில் அதிபட்சமாக 641 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.இன்று 7,661 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 23,83,624 ஆக அதிகரித்துள்ளது