10, 12-ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுதி மாணவர்கள் குறைந்த மதிப்பெண்களைப் பெற்றால் அது அவர்களின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கும் என டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

தமிழ்நாடு பாடத்திட்டத்தின் படியான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்து விட்டு அதற்கு முந்தைய தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் அவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறி விக்க வேண்டும்.

ஒருவேளை பொதுத்தேர்வுகளை நடத்தியே தீர வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால் ஆன்லைன் முறையில் சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளையும் ஆன்லைனில் நடத்த சம்பந்தப்பட்ட கல்வி வாரியங்கள் முன்வர வேண்டும்.