தடுப்பூசி போட்டுக்கொள்ளாவிட்டால் சம்பளம் கிடையாது

சத்தீஸ்கர் மாநிலம் கரேலா பெந்த்ரா மார்வாகி மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் நலத்துறையின் கீழ் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என பழங்குடியினர் நலத்துறை உதவி ஆணையர் கே.எஸ்.மஸ்ராம் உத்தரவிட்டார்.

அதில், கரேலா பெந்த்ரா மார்வாகியில் உள்ள பழங்குடியினர் நலத்துறை அலுவலகங்கள், துறைக்குட்பட்ட ஆசிரமங்கள், மருத்துவமனைகளில் பணியாற்றும் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொண்டு, அதற்கான சான்றிதழை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும், தடுப்பூசி போட்டுக்கொள்ளாவிட்டால் அடுத்த மாத சம்பளம் நிறுத்தி வைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு நகல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவியது. ஆணையரின் உத்தரவுக்கு சிலர் அதிருப்தி தெரிவித்தனர்.