சியோமி Mi 11 அல்ட்ரா ,1 புரோ மொபைல் வெளியானது !

புதிய ஸ்மார்ட்போன்கள் தினம் தினம் சந்தையில் வெளியாகிறது.மக்கள் இடையே ஸ்மார்ட்போன்கள் மோகம் இருந்து தான் வருகிறது.சியோமி நிறுவனம் Mi என்ற படைப்புகளில் செல்போன்களை வெளியிட்டு வருகிறது.

தற்போது Mi 11 அல்ட்ரா மற்றும் 11 புரோ என இரண்டு மாடல்களை சீனாவில் அறிமுகம் ஆகியுள்ளது . விற்பனைக்கு வந்த சில நொடிகளில் விற்று தீர்ந்துள்ளன இந்த இரண்டு மாடல் போன்களும். அதன் மூலம் சுமார் 1.2 பில்லியன் சீன நாட்டு கரண்சியை ஈட்டியுள்ளது அந்நிறுவனம்.

இரண்டு போன்களும் ஸ்நேப்டிரெகன் 888 சிப்செட், 6.81 இன்ச் கொண்ட AMOLED டிஸ்பிளே, 5000 mAH பேட்டரி, 67 வாட்ஸ் சார்ஜிங் வசதியுடன் வெளி வந்துள்ளது. கூடுதலாக Mi 11 அல்ட்ராவில் 48 மெகா பிக்ஸல் மற்றும் ரியர் சைடில் சிறிய அளவிலான செகன்டரி டிஸ்பிளேவும் இதில் உள்ளது.