தேர்தல் ஆணையத்தின் புதிய விதிமுறைகள் !

up-election-2022-voting-live-updates-up-assembly-election-phase-7-vote
வாக்குப்பதிவு தொடங்கியது

தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இந்த முறை திமுக மற்றும் அதிமுக இடையில் கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், ஏப்ரல் 4ம் தேதி மாலை 7 மணி முதல் தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவுகள் முழுவதுமாக முடிவடையும் வரையில் அரசியல் கட்சிகள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

ஏப்ரல் 4ம் தேதிக்கு பின்னர், தேர்தல் தொடர்பான எந்தவொரு பொதுக்கூட்டத்தையோ, ஊர்வலங்களையோ எந்த கட்சியினரும் நடத்த கூடாது.திரைப்படம், தொலைக்காட்சி, வானொலி, குறுஞ்செய்தி, வாட்ஸ்அப், முகநூல், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களின் பயன்படுத்தி அரசியல் கட்சியினர், பொது மக்களின் பார்வைக்கு கொண்டு விளம்பரங்களைக் கொண்டு செல்லக்கூடாது.

வாக்காளர்களை அழைத்து வருவதற்கோ, மீண்டும் வீட்டில் விடுவதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் யார் மீறினாலும், இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இவை இரண்டும் சேர்ந்து தண்டனையாக விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.