பெரியாரின் 47ஆவது நினைவுநாள்!!!

சுயமரியாதை, சமத்துவம், சாதி ஒழிப்பு பகுத்தறிவு, பெண் விடுதலை என தன் உயிர் நீங்கும் வரை போராடிய, சமூகத்தில் பல மாற்றங்களை கொணர்ந்த தந்தை பெரியாரின் 47ஆவது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டின் அரசியலின் பல மாற்றத்தை நிகழ்த்தி, அவர் இறந்த பின்னும் இன்றுவரை அவரது புகழை அனைத்து அரசியல் தலைவர்களும் போற்றிவருகின்றனர். அவரது நினைவுநாளான இன்று அவருக்குத் தலைவர்கள் பலர் மரியாதை செலுத்திவருகின்றனர்.

அந்த வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சமூக அடிமைத்தனம் தொடரும் வரை – ஏற்றத் தாழ்வுகள் இருக்கும் வரை – பெண்ணடிமைத்தனம் மறையாதவரை பெரியார் நித்தமும் நினைவுகூரப்படுவார்.