அதிமுக எம்.எல்.ஏக்கள் வரும் 6ஆம் தேதி சென்னைக்கு வரவேண்டும் – கட்சி தலைமை உத்தரவு

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே இருப்பதால் கட்சியில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படவேண்டும் எனவே அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் வரும் 6ஆம் தேதி சென்னைக்கு வரவேண்டும் என அக்கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.

மேலும் சசிகலாவும் சிறையில் இருந்து வெளிவர இருப்பதால், அ.தி. மு.க.வில் இப்போதே முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் நடந்த அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்திலும் இந்த பிரச்சினை எதிரொலித்தது.

இந்த நிலையில், அ.தி.மு.க. வில் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்பதை வரும் 7-ந்தேதி அறிவிக்கப்பட இருப்பதாக கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

எனவே எம்.எல்.ஏக்கள் உடன் கலந்து ஆலோசித்து ஒரு முடிவு எடுக்கவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here