Vaikunda Ekadasi Festival: வைகுண்ட ஏகாதசி திருவிழா பகல்பத்து உற்சவத்தின் இன்று 9ம் திருநாள்

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அரங்கநாத சுவாமி கோயிலில் (Vaikunda Ekadasi Festival) வைகுண்ட ஏகாதசி பகல்பத்து திருவிழா வெகு விமர்சையாக நடந்து வருகிறது. இத்திருவிழாவின் 9ம் நாளான இன்று ‘முத்துக்குறி’ பாசுரத்திற்கு ஏற்ப நம்பெருமாள் முத்து பாண்டியன் கொண்டை, முத்துகலிங்கு ஆபரணம், முத்தங்கி முத்து அபயஹஸ்தம், முத்து திருவடி, முத்து ஆபரணங்களை அணிந்து பக்தர்களுக்கு கண்கொள்ளாக்காட்சி அளித்தார்.

மேலும் பகல் பத்தின் கடைசி நாளான ஜனவரி 1ம் தேதி (புத்தாண்டு) நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் காட்சி கொடுக்கிறார். இதனை தொடர்ந்து இராப்பத்து விழாவின் முதல் நாளான 2ம் தேதி முக்கிய நிகழ்வான பரம பதவாசல் திறப்பு நடைபெறுகிறது. மேலும் சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு வருகின்ற 2ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.