Pani matha church festival : தூய பனிமய மாதா பேராலய திருவிழா இன்று தொடங்கியது

தூத்துக்குடி : Pani matha church festival started today : தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள உலக புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயத்தின் 440-வது திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தத் திருவிழா 10 நாள்கள் நடைபெற உள்ளது.

தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள உலக புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயத்தின் 440-வது திருவிழா (440th Festival) செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொட‌ங்கியது. கொடியேற்றதிற்கு முன்பு கூட்டு திருப்பலி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து பனிமாதா உருவம் பொறித்த கொடியை மேளதாளம் முழங்க ஊர்வலமாக அருள் தந்தைகள் கொண்டுவந்து பேராலயம் எதிரே உள்ள கொடிமரத்தில் உலக நன்மைக்காகவும் கரோனா தொற்றில் இருந்து முழுமையாக விடுபடவும் (Get rid of corona infection completely) சிறப்பு ஜெபம் செய்து பனிமய மாதா உருவப்படம் பதித்த கொடி ஏற்றப்பட்டது.

அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் புறாக்களையும் மற்றும் பலூன்களையும் (Pigeons and balloons) பறக்கவிட்டு கைகளை தட்டி தங்கள் மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் கி. செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இன்று கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா ஆக. 5-ம் தேதி வரை (Aug. 5th) அடுத்த 10 நாள்கள் சிறப்பாக நடைபெறும். க‌ரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் இன்றி நடைபெற்றது. இந்த ஆண்டு திருவிழாவில் திரளானோர் கலந்து கொள்வார்கள் என்பதால் பாதுகாப்பு பணியில் 1 ஆயிரம் போலீசார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் (SP Balaji Saravanan) தலைமையில் ஈடுபட்டுள்ளனர்.