Tender Malpractice Case : இன்று எடப்பாடி பழனிசாமி மீதான டென்டர் முறைக்கேடு வழக்கு விசாரணை

தில்லி: Tender Malpractice Case hearing today against EPS : நெடுஞ்சாலை ஒப்பந்த முறைகேடு விவகாரத்தில் சிபிஐ விசாரணையை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கை உச்ச‌நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.

தமிழகத்தில் நெடுஞ்சாலைகளுக்கு ஒப்பந்தங்களை (contracts for highways) வாங்கியதில் ரூ. 4,800 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், இது தொடர்பாக சிபிஐ விசாரணை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுகவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார்.

கடந்த 2018-ஆம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த நீதி மன்றம் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை (CBI investigation) நடத்தலாம் என அனுமதி வழங்கியது. இதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி, தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சிபிஐ-க்கு இடைக்காலத் தடை விதித்தது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு நீண்டகாலமாக நிலுவையில் கிடந்தது. இந்த நிலையில் இந்த வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா (Supreme Court Chief Justice NV Ramana) அமர்வு முன்பு முறையிடப்பட்டது.

இதனிடையே இந்த வழக்கு தொடர்பான விசாரணையை உச்சநீதிமன்றம் இன்று விசாரணை (Supreme Court hearing today) செய்ய உள்ளது. எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொது செயலாளராக அறிவிக்கப்பட்ட பிறகு இந்த வழக்கு விசாரணை நடைபெற உள்ளதால், தமிழக அரசியல் களத்தில் இதனை அனைவரும் உன்னிப்பாக‌ கவனித்து வருகின்றனர்.