Todays horoscope : இன்றைய ராசிபலன் (01.07.2022)

Todays Horoscope

Astrology : வெள்ளிக்கிழமை உங்களின் ராசிபலன் எப்படி உள்ளது என்பதனை (Todays horoscope) அறிந்து கொள்ளுங்கள்.

மேஷம்:
(todays horoscope) அச்சமற்ற தன்மையால் மனதின் சக்தி அதிகரிக்கும். இந்த வேகம் தொடரட்டும். எந்த சூழ்நிலையையும் கட்டுப்படுத்த இது உதவும். இன்று நிதி வாழ்க்கையில் செழிப்பு இருக்கும். இதன் மூலம், நீங்கள் இன்று கடன்களிலிருந்து விடுபடலாம். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுங்கள். உங்கள் காதலில் புதிய திருப்பம் ஏற்படலாம். உங்கள் மன உறுதியால் இன்று அலுவலகத்தில் பணிகள் நல்ல முறையில் கழியும். உங்கள் குடும்பத்தினர் இன்று உங்களுடன் பல சிக்கல்களைப் பகிர்ந்துகொள்வார்கள். ஓய்வு நேரத்தில் விரும்பும் செயல்கள் ஏதாவது செய்வீர்கள். மற்ற எல்லா நாட்களை விட மிகவும் சிறப்பான நாளாக இன்று அமையும்.

ரிஷபம்:
நெருக்கடியான நேரங்களிலும் பொறுமையை இழக்காதீர்கள். உங்கள் பணத்தை மதப் பணிகளில் முதலீடு செய்வதால் மன அமைதி பெற வாய்ப்புள்ளது. குடும்பத்திற்கு மகிழ்ச்சியான செய்தி தபாலில் வரும். இன்று மேற்கொள்ளும் கூட்டு முயற்சிகள் இறுதியில் ஆதாயம் தருபவையாக இருக்கும். குடும்பத்தினர் உங்களுடன் பல சிக்கல்களைப் பகிர்ந்துகொள்வார்கள். ஓய்வு நேரத்தில் ஏதாவது செய்ய விரும்புவீர்கள். பணியில் இன்று உங்கள் சீனியர்கள் தேவதையைப் போல நடந்து கொள்வார்கள்.

மிதுனம்:
இன்று மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். பணத்தை சேமிக்க வேண்டும் என்ற எண்ணத்தை இன்று முடிக்க முடியும். இனிமையான மற்றும் அற்புதமான மாலை நேரத்துக்காக விருந்தினர்கள் உங்கள் வீட்டில் கூடுவார்கள். மனதிற்கினியவரிடம் அக்கறையில்லாமல் இருப்பதால் வீட்டில் பதற்றமான சூழ்நிலை ஏற்படலாம். இன்று ஆபீசில் அருமையான ஒருவரை சந்திப்பீர்கள். இன்று உங்கள் நேரத்தை அதிக நேரம் தேவையில்லாத விஷயங்களுக்காக செலவிடலாம். வேண்டுமென்றே உங்களை உங்கள் துணை வார்தைகளால் காயப்படுத்துவார். இதனால் நீங்கள் வருத்தமடைய கூடும்.

கடகம்:
(todays horoscope) தொடர்ச்சியான முயற்சியால் வெற்றி உறுதியாகும் என்பதால் பொறுமையாக இருங்கள். திரட்டப்பட்ட செல்வம் உங்களுக்காக வேலை செய்யும் என்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும், எனவே இந்த நாளில் உங்கள் செல்வத்தை சேமிக்க யோசனை செய்யுங்கள். நெருங்கியவர்கள் உங்களுக்கு புதிய நம்பிக்கைகளும் கனவுகளும் ஏற்படுத்துவார்கள். ஆனால் உங்கள் சொந்த முயற்சியை வைத்தே அவை அமையும். இன்று நீங்கள் உறவினர்களிடமிருந்தும் விலகி அமைதி பெறும் ஒரு இடத்தில் நேரத்தை செலவிட விரும்புவீர்கள். குழப்பங்களை காரணம் காட்டி இன்று உங்கள் துணை சண்டையிடக்கூடும்.

சிம்மம்:
அமைதியாக ஓய்வெடுக்க‌ வேண்டிய நாள். பிடித்தவற்றில் ஈடுபடுங்கள். பெற்றோர்கள் ஆதரவால் நிதி பிரச்சினை தீர்ந்துவிடும். வீட்டில் ஏற்பட்ட பழுதை முடிப்பது அல்லது நண்பர்கள் ஒன்று கூடுவதால் பரபரப்பாக‌ இருப்பீர்கள். இன்று காதலில் சிக்கல் நிறைந்திருக்கும். கடமை உணர்வோடு பணியாற்றுவோருக்கு பதவி உயர்வு அல்லது பணப்பயன் கிடைக்கும். தகவல் தொடர்புகளை கவனமாகக் கையாள வேண்டும். நகைச்சுவையாக பேசிக்கொண்டிருக்கும் போது பழைய விஷயத்தை பேசுவதால் வாக்குவாதம் ஏற்படலாம்.

கன்னி:
பணிவான நடத்தையால் பாராட்டப்படுவீர்கள். அவசியமான பொருட்களை வாங்கும் வகையில் உங்களின் நிதி நிலைமை மேம்படும். துணைவரின் ஆரோக்கியம் உங்களுக்கு கவலை தரலாம். சிறிது கவனம் தேவைப்படும். விழாக்களுக்கு செல்லும்போது கவனமாக ஆடை அணிய வேண்டும். முக்கியமானவர்களுடன் கலந்து பேசும் போது ஆர்வம் காட்டினால் அதில் மதிப்பு மிக்க யோசனை பெற‌லாம். குழந்தைப் பருவத்தில் நீங்கள் விரும்பிய எல்லாவற்றையும் இன்று செய்ய விரும்புவீர்கள். இன்று உங்கள் துணையுடன் ஓய்வாக பொழுதை கழிப்பீர்கள்.

துலாம்:
வாசனை திரவியத்தைப் போல உங்களின் நம்பிக்கை மலரும். நீங்கள் சேமித்த பணம் இன்று உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். குடும்பத்தினர் அல்லது நெருங்கிய நண்பர்களுடன் சேர்ந்து இந்த நாளை அருமையானதாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் வார்த்தைகளை நிரூபிக்க பங்குதாரருடன் விவாதிக்கலாம். பங்குதாரர் புரிந்துணர்வைக் காண்பிப்பதன் மூலம் உங்களை அமைதிப்படுத்துவார். பணியில் இருப்பவர்களுக்கு அண்மையிலான சாதனைக்காக‌ பாராட்டும் ஆதரவும் கிடைக்கும். உங்கள் நசைச்சுவை உணர்வுதான் மிகப் பெரிய சொத்து என்பதனை உணர்வீர்கள். இன்று, உங்கள் துணையுடன் வேளியே சென்று உல்லாசமாக பொழுதை கழிப்பீர்கள்.

விருச்சிகம்:
(todays horoscope) நல்ல ஆரோக்கியம் காரணமாக, நண்பர்களுடன் நேரத்தை செலவிட‌ திட்டமிடுவீர்கள். ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது கவர்ச்சிகரமாகத் தோன்றும். நண்பர்களுடனும் மற்ற‌வர்களிடமும் எச்சரிக்கையாக இருங்கள். திடீரென காதல் அனுபவம் உங்கள் உற்சாகத்தை அதிகரிக்கும். உங்கள் ஆலோசனையை மற்றவர்கள் எதிர்பார்ப்பார்கள். என்ன சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்வார்கள். மாலையில் ஓய்வு நேரத்தை பூங்காக்களில் செலவிட விரும்புவீர்கள். அலுவலக அரசியல் மட்டுமின்றி அனைத்திலும் நீங்கள் ஆளுமை செலுத்துவீர்கள்.

தனுசு:
உங்களுக்கு பண லாபத்தை ஏற்படுத்தக் கூடிய உற்சாகமான புதிய சூழ்நிலையைக் கண்டுபிடிப்பீர்கள். உங்கள் பிரச்சினைகளை குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம், மனம் லேசாக இருப்பதை உணர்வீர்கள். காதலில் ஏற்படும் ஏமாற்றம் உங்கள் தைரியத்தை இழக்கச் செய்யாது. பணியில் உங்களது கடின உழைப்பு இன்று நல்ல பலனை தரும். உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்ய முடியும். உங்களின் தேவைகளை உங்கள் துணை நிறைவேற்ற தவறலாம். அதனால் நீங்கள் ஏமாற்றமடையக்கூடும்.

மகரம்:
வேதனையில் இருக்கும் ஒருவருக்கு உதவ முயற்சியுங்கள். பணம் பற்றாக்குறையால் வீட்டில் பிரச்னை காணப்படும், இது போன்ற சூழ்நிலையில் வீட்டின் உறுப்பினர்களிடம் ஆலோசனை கேளுங்கள். வீட்டின் உறுப்பினரின் நடத்தை காரணமாக, அவர்களிடம் பேச நேரிடும். இனி நீங்கள் ஏக்க கனவுகள் காண தேவையில்லை ஏனென்றால் அவை இன்று நிஜமாக நிறைவேறும் வாய்ப்புள்ளது. புதிய வாடிக்கையாளருடன் பேச்சு நடத்த இது அற்புதமான நாள். இன்று, உங்கள் குழந்தைப் பருவத்தில் நீங்கள் விரும்பிய எல்லாவற்றையும் இன்று செய்ய விரும்புவீர்கள். இன்று உங்கள் துணை ஒரு அழகான ஆச்சரியத்தை அளிப்பார்.

கும்பம்:
நீங்கள் நேரத்தையும், பணத்தையும் மதிக்க வேண்டும், இல்லையெனில் சிக்கல்கள் அதிகரிக்கும். உங்கள் வாழ்வில் குடும்பத்தினர்களுக்கு சிறப்பான‌ இடம் இருக்கும். உங்கள் கண்ணீரை நண்பர்கள் துடைப்பர். புதிய திட்டம் மற்றும் செலவுகளை தள்ளிப் போடுங்கள். பலரை சந்திப்பதால் உங்களுக்கு வருத்தம் ஏற்படும். உங்களுக்கான‌ நேரத்தைக் ஒதுக்க முயற்சி செய்யுங்கள். இன்று உங்களுக்கு ஒரு சிறந்த நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு போதுமான நேரம் கிடைக்கும். உங்கள் துணையுடன் நேரம் செலவிடும் மிகச்சிறந்த நாளாக இன்று அமையும்.

மீனம்:
பணியிலும், வீட்டிலும் சில அழுத்தங்கள் காரணமாக‌ கோபங்கள் ஏற்படும். இருப்பிடத்துக்கான முதலீடு லாபகரமாக இருக்கும். மோதல்களுக்கு தேவையில்லாமல் இடம் தராதீர்கள். மாறாக சுமுகமாக அவற்றைத் தீர்க்க முயற்சி செய்யுங்கள். தனிப்பட்ட வழிகாட்டுதல் உங்கள் உறவை மேம்படுத்தும். இன்று அலுவகத்தில் ஒரு நல்ல மற்றம் உருவாகக்கூடும். முடிக்கப்படாமல் பாதியில் விட்டிருந்து பணிகளின் விளைவுகளை இன்று சந்திக்க நேரிடும். ஓய்வு நேரத்தில் பணி செய்ய நேரிடலாம். இன்று உங்கள் வாழ்க்கையில் அனுபவித்த அத்தனை துயர‌ங்களையும் உங்கள் துணையின் அன்பில் மறப்பீர்கள்.

must read : தென்கன்னடம் மாவட்டத்தில் கன மழை : படீல்-மங்களூரு ரயில் நிலையத்தின் இடையே பாதையில் மலைமண் சரிவு

must read : மகராஷ்டிரா மாநிலத்தின் புதிய முதல்வராக‌ ஏக்நாத் ஷிண்டே பதவி ஏற்றார்

todays horoscope-01-07-2022