பர்மிங்காம்: Virat Kohli: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது டெஸ்ட் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்க உள்ளது. இதில் பங்கு கொள்ள உள்ள இந்திய அணியினர் புதன்கிழமை எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டனர். பயிற்சியில் ஈடுபட்ட வீராட் கோலி பின்னர் மைதானத்திலிருந்து திரும்பியபோது ஒரு சிறப்பு சம்பவம் நடந்தது. அது என்ன தெரியுமா?
எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் பயிற்சி முடிந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மற்றும் ஷுப்மான் கில் ஆகியோர் பெவிலியனுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். எட்ஜ்பஸ்டனின் அதிகாரப்பூர்வ சுட்டுரைக் கணக்கைக் கையாளும் கேமராமேன் ஒருவர் விராட் கோலியை பின்தொடர்ந்துள்ளார். சிறிது தூரம் சென்ற கோலி, திடீரென இடையே நின்று கேமராமேனை திரும்பிப் பார்த்து கேமராவிற்கு போஸ் கொடுத்துள்ளார்.
???????????????????????????? ???????????????? ???????????? ????????????????. ????
— Edgbaston (@Edgbaston) June 29, 2022
My life is complete. #Edgbaston | #ENGvIND pic.twitter.com/Ij6kDbnuAA
பின்னர் முகத்தில் புன்னகையுடன் கோலி, “வாட்ஸ் அப் ?” என்று கூறி நடந்துச் சென்றுள்ளார். இது தொடர்பான பதிவை தனது அதிகாரபூர்வ சுட்டுரையில் வெளியிட்ட அந்த கேமராமேன், இன்று மன்னருடன் நடந்து சென்றுள்ளேன். இதன்மூலம் எனது வாழ்க்கையின் பயன் நிறைவடைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
must read : Neeraj Chopra: மீண்டும் தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா
must read : தென்கன்னடம் மாவட்டத்தில் கன மழை : படீல்-மங்களூரு ரயில் நிலையத்தின் இடையே பாதையில் மலைமண் சரிவு
cricket player virat kohli given bose to the photographer



