Presidential Election 2022: குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட‌ 98 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பபட்டன: அதில் இருவர் மனுக்கள் மட்டுமே ஏற்பு

Nomination papers : நடைபெற உள்ள‌ குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட‌ 98 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். வியப்பு என்னவென்றால், இந்த 98 வேட்பு மனுக்களில் 2 பேரின் வேட்புமனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டுள்ளது.

Presidential Election 2022: 2022-ஆம் ஆண்டு நடைபெற உள்ள‌ குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட‌ 98 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதில் 2 பேரின் வேட்புமனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டுள்ளது. சரிபார்ப்பு பணிகள் முடிந்த நிலையில், 96 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. வேட்பு மனுக்களை திரும்பப் பெற ஜூலை 2-ஆம் தேதி கடைசி நாளாகும். தேர்தல் அதிகாரிகள் வெளியிட்ட புள்ளி விவரப்படி, ஜூன் 29-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டது.

மொத்தம் தாக்கல் செய்யப்பட்ட 98 வேட்பு மனுக்களில் 26 வேட்பு மனுக்கள் தொழில்நுட்ப காரணங்களால் ரத்து செய்யப்பட்டன. மீதமுள்ள 72 வேட்பாளர்களின் வேட்புமனுவை சரிபார்த்ததில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மா மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா ​​ஆகியோரின் வேட்பு மனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டன.

இந்த முறை மாநிலங்களவை முதன்மைச் செயலாளர் பி.சி.மோடி தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். தில்லி உட்பட 17 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் நிரப்பப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

அதிகபட்சமாக தில்லியில் சேர்ந்த‌ 19 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வதில் முதல் இடத்திலும், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த‌ 16 பேர் வேட்பு மனு தாக்கல் செய்வதில் 2வது இடத்தைப் பிடித்துள்ளனர். அதேபோல், மகாராஷ்டிராவில் இருந்து 11 பேரும், தமிழகத்தில் இருந்து 10 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். திரௌபதி முர்மு உட்பட 10 பெண்கள் குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

தேர்தலில் போட்டியிட ரூ. 15 ஆயிரம் ரூபாய் வைப்புத் தொகை செலுத்த வேண்டும், பெரும்பாலானவர்களின் வேட்பு மனுக்கள் வைப்புத் தொகை செலுத்தாததால் நிராகரிக்கப்பட்டன‌. 62 வேட்பு மனுக்களில் ரூ. 9,30,000 ஆயிரம் ரூபாய் வைப்புத் தொகை செலுத்த‌ப்பட்டுள்ளது. வைப்புத் தொகை செலுத்தியவர்கள் விண்ணப்பத்துடன் அதனை திரும்பப் பெறலாம்.