Jasprit bumrah: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கேப்டன் பும்ராவுக்கு எம்எஸ் தோனி தான் உத்வேகம்

லண்டன்: New Captain Jasprit bumrah: இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார். நிரந்தர கேப்டன் ரோஹித் சர்மா கரோனா பாதிப்பிலிருந்து மீளாததால் பும்ரா இந்திய அணியை வழிநடத்தி செல்கிறார்.

சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் ஜஸ்பிரித் பும்ரா தலைமை ஏற்றுள்ளதே முதல் சவாலாகும். கடந்த காலங்களில் தனது மாநில அணியை வழிநடத்திய அனுபவம் பும்ராவுக்கு இல்லை. குஜராத், மும்பை இந்தியன்ஸ் மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் ஐபிஎல் அணிக்காக விளையாடி வரும் ஜஸ்பிரித் பும்ரா, இதுவரை ஒரு போட்டிக்கு கூட கேப்டனாக இருக்கவில்லை. இத்தனைக்கும், ஜூனியர் கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு கேப்டனாக இருந்த அனுபவம் பும்ராவுக்கு இல்லை. ஆனால் தற்போது டெஸ்ட் அணியை வழிநடத்தும் பெரிய பொறுப்பு அவருக்கு உள்ளது.

தலைமை அனுபவம் இல்லாத ஜஸ்பிரித் பும்ராவுக்கு முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி ஒரு உத்வேகமாக உள்ளார். இதை பும்ராவே கூறியுள்ளார். தோனியுடன் ஒருமுறை பேசியது எனக்கு நினைவிருக்கிறது. நான் இந்தியாவை வழிநடத்தும் முன், எந்த அணிக்கும் கேப்டனாக இருந்த அனுபவம் எனக்கு இல்லை என்று தோனி என்னிடம் ஒருமுறை கூறினார். தோனி எல்லா காலத்திலும் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவர்.

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டனாக‌ ஜஸ்பிரித் பும்ரா உள்ளார். கடந்த ஆண்டு கரோனா காரணத்தால் இந்தியா-இங்கிலாந்து இடையே யான 5 டெஸ்டு தொடரின் இறுதி போட்டியாக இது உள்ளது. தொடரில் இந்தியா 2-1 என்ற நிலையில் முன்னணி உள்ளது. இங்கிலாந்து மைதானத்தில் கடைசி டெஸ்ட் டிராவில் முடிந்தாலும் 15 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றுவது குறிப்பிடத்தக்கது.

“டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவை வழிநடத்துவது மிகப்பெரிய கௌர‌வம் என 28 வயது, வலது கை ஆட்டக்காரரான பும்ரா கூறியுள்ளார். துணை கேப்டன் கே.எல்.ராகுலும் காயமடைந்தோர் பட்டியலில் இருப்பதால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வழிநடத்த பும்ராவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் கேப்டன் கபில் தேவுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவை வழிநடத்தும் முதல் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆவார். இந்தியாவுக்காக 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பும்ரா 8 இன்னிங்ஸ்களில் 5 விக்கெட்கள் உட்பட 123 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.