Today Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (22.12.2022)

சுபகிருது வருடம் மார்கழி மாதம் 7ம் தேதி வியாழக்கிழமை (Today Rasi Palan) 22.12.2022. சந்திர பகவான் இன்று விருச்சிக ராசியில் பயணம் செய்கிறார். இன்று மாலை 06.29 மணி வரை சதுர்த்தசி. பின்னர் அமாவாசை.

மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகள் சற்று விலகி போகும். குடும்பத்தில் சிறிய வார்த்தைகள் பேசினாலும் பெரிய சண்டையில் முடியும். தர்மசங்கடமான பிரச்சனையில் அவ்வப்போது மாட்டிக்கொள்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் சற்று காலத்தாமதம் ஆகும். பொறுமை தேவைப்படும் நாளாகும்.

ரிஷபம்: சவாலாக இருந்த சில காரியங்கள் சாதாரணமாக முடிந்துவிடும். பிள்ளைகளால் அந்தஸ்து உயர வாய்ப்பு உள்ளது. மனைவி வழியில் இனிப்பான செய்தி கிடைக்கும். திருமணப் பேச்சு வார்த்தை சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் வேலையாட்களில் ஆதரவு கிடைக்கும்.

மிதுனம்: குடும்பத்தினர் உங்களது ஆலோசனைகளை ஏற்று செயல்படுவர். அரசால் அனுகூலம் கிட்டும். நீதிமன்ற வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். அதிகாரத்தில் இருப்பவர்கள் உதவலாம். தொழிலில் லாபம் உயரும். உயரதிகாரிகள் சொல்படி நடந்து கொள்வீர்கள். தொட்டது முன்னேற்றம் அடையும் நாள்.

கடகம்: பிள்ளைகளின் வருங்காலத் திட்டங்களில் ஏதாவது ஒன்று நிறைவேறும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமித்து வைப்பீர்கள். புதிய சிந்தனைகள் மனதில் உருவாகும். நட்பு வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவர்.

சிம்மம்: மகளுக்கு நல்ல மருமகன் கிடைப்பார். அரசு அதிகாரிகளின் உதவியால் சில வேலைகளை முடிப்பீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தங்குத்தடையின் முடியும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் ஊழியர்கள் ஆதரிப்பார்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாளாக அமையும்.

கன்னி: உடன் பிறந்தவர்கள் உங்களின் வேலைகளை பங்கிட்டு கொள்வார்கள். துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளது. நல்ல காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியபாரத்தில் அனுபவம் வாய்ந்த வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் உள்ள நுணுக்கங்களை கற்றுக்கொண்டு செயல்படுவீர்கள். துணிச்சலுடன் செயல்படும் நாள் ஆகும்.

துலாம்: இதுவரையில் இருந்த காரியத் தடைகள் நீங்கி நல்லது நடைபெறும். குடும்பத்தில் அமைதியான சூழல் நீங்கும். வராமல் இருந்த பணம் கைக்கு வந்து சேரும். உறவினர்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் வந்து சேரும். புதிய மாற்றங்கள் நிகழும் நாள்.

விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் உள்ளதால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டிய நிலை உண்டாகும். நண்பர்கள் உறவினர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். சிறுசிறு அவமானங்கள் வந்து நீங்கும். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சண்டை வரலாம். எனவே கவனமாக இருக்க வேண்டும்.

தனுசு: சிறிய வேலைகளையும் அலைந்து திரிந்து முடிக்க வேண்டியதாகும். பிள்ளைகளால் டென்ஷன் உண்டாகும். வாகனத்தில் அதிக கவனம் தேவை. வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்டும். உத்தியோகத்தில் மற்றவர்களை விமர்சனம் செய்ய வேண்டாம். பொறுமைத் தேவைப்படுகின்ற நாள்.

மகரம்: வெளியில் அந்தஸ்து உயரும். தீராத கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். குடும்ப சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வேற்று மதத்தவர்கள் உதவி செய்வர். வியபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியமான அறிவுரை வழங்குவார்கள். இனிமையான நாள் ஆகும்.

கும்பம்: பொதுவான காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடன் பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். எதிர்பார்த்த வேலைகள் நிறைவேறும் நாள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது சில உதவிகளை செய்வார்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும் நாள்.

மீனம்: கணவன், -மனைவி இடையே இருந்த மோதல்கள் விலகும். பணவரவு திருப்தியை கொடுக்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். நல்லவை நடக்கும் நாள்.