Midnight terror in Kanchipuram: நள்ளிரவில் 7 பேரை வெட்டி அலறவிட்ட கொள்ளை கும்பல்

காஞ்சிபுரம்: In Chinna Kancheepuram, there has been a commotion due to a gang that hacked and robbed 7 people in the middle of the night. சின்ன காஞ்சிபுரத்தில் நள்ளிரவில் 7 பேரை வெட்டி கொள்ளையடித்த கும்பலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சின்ன காஞ்சிபுரம் பகுதியில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு 8 மணி முதல் 11 மணி வரை 4 பேர் கொண்ட கும்பல் பணம் மற்றும் வழிப்பறியில் பட்டாக்கத்தியுடன் ஈடுபட்டுள்ளனர். மேலும் கொடுக்க மறுப்போரை கத்தியால் வெட்டி அச்சுறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே பகுதியில் உள்ள குள்ளப்பன் தெருவில் விமல் என்பர் வீட்டிலேயே சிறிய பெட்டிக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு வந்த மூன்று இளைஞர்கள் தண்ணீர் பாட்டில் கேட்ட நிலையில் கடையினுள் புகுந்து பட்டாக்கத்தியை காட்டி பணம் மற்றும் செல்போனை திருடி மின்னல் வேகத்தில் சென்றுள்ளனர்.

இதேபோல் சுண்ணாம்புக்கார தெரு, அமுது படி சாலை, தேனம்பாக்கம் சாலை என பல்வேறு இடங்களில் சாலையில் வருவோரை பட்டாக்கத்தியால் வெட்டி பணம் மட்டும் செல்போனை பறித்துச் சென்றுள்ளனர்.

வெட்டு காயங்கள் இருந்த ஆனைகட்டி தெருவை சேர்ந்த சகோதரர்கள் சுரேஷ் மற்றும் ஆனந்தன், சேஷாத்திரி பாளையம் பகுதியை சேர்ந்த சதீஷ், டோல்கேட் பகுதியை சேர்ந்த சீனு மற்றும் வீரராகவன் திருக்காலிமேடு பகுதியை சேர்ந்த தயாளன் சுண்ணாம்பு கார தெருவை சேர்ந்த சதீஷ் ஆகிய ஏழு பேரும் ஒன்றன்பின் ஒன்றாக பலத்தை வெட்டு காயங்களுடன் கடும் ரத்தம் வெளியேறிய நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்ததால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் இச்சம்பவம் குறித்து பலர் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு தெரிவித்த நிலையில் காவல்துறை இதற்கு மேல் எந்த சம்பவம் நடக்காத வகையில் உடனடியாக செயல்பட்டனர். இதுகுறித்த சிசிடிவி காட்சிகளை கண்ட காவல்துறை உடனடியாக பல்சர் பைக் சுற்றி வருவதை அறிந்து இதுகுறித்து அனைத்து காவல் அலுவலர்களுக்கும் எச்சரிக்கை விடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து உடனடியாக செயல்பட்டதால் நரேஷ் மற்றும் சுரேஷ் என்ற இரு வாலிபர்கள் பட்டாக்கத்தி , இருசக்கர வாகனத்துடன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இவர்களுடன் இருந்த மட்டும் இரண்டு வாலிபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

வெட்டுப்பட்ட நபர்களிடம் இது குறித்து கேட்டபோது, இருசக்கர வாகனத்தில் நான்கு பேர் வந்ததாகவும் செல்போன் மற்றும் பணம் கேட்டதாகவும், நாங்கள் பதில் சொல்வதற்குள் எங்களை பட்டா கத்தியால் தாக்கியதில் நாங்கள் அச்சத்துடன் இருந்தோம் செய்வதறியாது இருந்ததாக தெரிவித்துள்ளனர்.

இளைஞர்கள் தற்போது கஞ்சா போதை பழக்கத்தில் மாலை நேரங்களில் குற்ற சம்பவங்களில் தைரியமாக ஈடுபடுவதும், சிறு காசுக்காக உயிரைக் கூட எடுக்கும் மன நிலையில் உள்ளதாக இதுபோன்ற சம்பவங்கள் தெரியப்படுத்துகிறது. அடுத்தடுத்த நபர்கள் பலத்த ரத்த வெள்ளத்தில் அரசு மருத்துவமனைக்கு நுழைந்ததால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நபர்களின் உறவினர்கள் உணவு வாங்க வந்த மக்கள் அச்சத்துடன் காணப்பட்டு அவர்களும் என்ன நடக்கிறது என்று தெரியாமல் பயத்துடனே காணப்பட்டனர்.