First Case Of Omicron : சீனாவை அச்சுறுத்திய பிஎப்7 ஒமைக்ரான் கொரோனா இந்தியாவில் நுழைந்தது

டெல்லி: சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் உருவான (First Case Of Omicron) கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெருந்தொற்றாக பரவி கோடிக்கணக்கான உயிர்களை காவு வாங்கியது. அதில் இருந்து உலகம் கடந்த ஒரு ஆண்டாக மீண்டு வந்து இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் ஒரு ஆபத்தான வைரஸ் சீனாவில் உருவாகியிருப்பது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

அந்த வகையில் சீனா, ஜப்பான், தென்கொரியா, பிரேசில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் வீரியம் அடைந்து வேகமாக பரவி வருகிறது. இதனால் சீனாவில் ஏற்கனவே சில குறிப்பிட்ட நகரங்களில் ஊரடங்கை பிறப்பித்து கொரோனாவை கட்டுப்படுத்தி வருகிறது.

அதே போன்று கொரோனா வைரஸ் இந்தியாவில் கால் பதித்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று (டிசம்பர் 21) காலை அவசர ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள், எய்ம்ஸ் இயக்குனர் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர். அதன்படி இந்தியாவில் எந்த மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பன பற்றி ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், பொதுமக்கள் கூட்டமாக கூடும் இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் மீண்டும் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளவும், கட்டாயமாக முககவசம் அணிந்து செல்ல வலியுறுத்த வேண்டும் என பேசப்பட்டுள்ளது.

கடந்த முறை கொரோனா தொற்று உலகளவில் அதிகரித்தபோது இந்தியாவில் முதன் முறையாக லாக்டவுன் போடப்பட்டு பல கோடி மக்களுக்கு நோய் பரவாமல் தடுக்கப்பட்டது. இதனை உலக நாடுகளும் பின்பற்றியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சீனாவில் மிக வேகமாக பரவி வரும் பிஎப்7 ஒமைக்ரான் திரிபு இந்தியாவிலும் தற்போது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் குஜராத் மாநிலத்தில் 2 பேரும், ஒடிசாவில் ஒருவரும் இந்த வைரஸ் நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் பிற மாநிலங்களிலும் வைரஸ் வேகமாக பரவி விடுமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. முடிந்த வரையில் வெளியில் செல்லும்போது முககவசம் அணிந்து சென்றால் நோயில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளலாம்.

முந்தைய செய்தியை பார்க்க:3 Members Of The Same Family Committed Suicide: மன உளைச்சலால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை: பெங்களூருவில் அதிர்ச்சி

முந்தைய செய்தியை பார்க்க:Gst For Tamilnadu Arrears Only Rs 1200 Crore: தமிழகத்துக்கு ஜி.எஸ்.டி. பாக்கி ரூ.1,200 கோடி மட்டுமே: நிர்மலா சீதாராமன் தகவல்